Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் "சிக்னல்' கோளாறு:வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் நகரின் முக்கியச் சாலைகளில் சிக்னல் விளக்குகள் எரியாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
         ராஜபாளையத்தில் தற்போது வாகனப் போக்குவரத்து நெரிசல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பழைய பேருந்து நிலையம் எதிரே காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் தினமும் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. மேலும், பொதுமக்களும் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
          சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்துக் காவல் துறை சார்பில் முக்கியச் சாலைகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. அதன்பின்னர், போக்குவரத்து  ஓரளவு சீரானது. 
         ஆனால், சமீப காலமாக போக்குவரத்து சிக்னல்கள் செயலிழந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, ஜவஹர் மைதானம் பேருந்து நிறுத்தம், காந்தி கலை மன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்கள் செயலற்று கழன்று கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.    இந்நிலையில், வாகன ஓட்டிகள் பொதுமக்களின் உயிர் மீது அக்கறை கொள்ளாமல், அசுர வேகத்தில் செல்கின்றனர். எனவே, மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறை செயலிழந்து உள்ள இந்த சிக்னல்களை சீரமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai