Enable Javscript for better performance
விருதுநகரில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு

    By DIN  |   Published on : 18th May 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே கிணற்றில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
            ஜக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சக்திவேல் (14). இவர், விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவர் தனது உறவினரான விளாத்திகுளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ராஜ்குமார் (13) என்பவருடன் சேர்ந்து வீட்டருகே உள்ள கிணற்றில் மீன்பிடிக்க தூண்டிலுடன் சென்றுள்ளார்.
          ராஜ்குமார் கிணற்றின் மேல் பகுதியில் நின்றிருந்தபோது, சக்திவேல் கிணற்றின் உள்பகுதியில் இறங்கி தூண்டில்போட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, மண் சறுக்கியதில் சக்திவேல் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
         இது குறித்து ராஜ்குமார் வீட்டில் தகவல் கூறியதன்பேரில், அங்கிருந்தவர்கள் கிணற்றில் குதித்து சக்திவேலை மீட்டு, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவர் சக்திவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
         இது குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai