Enable Javscript for better performance
விருதுநகர் ஆயுதப்படை குடியிருப்பு கட்டடம் சேதம்: அச்சத்தில் போலீஸார் குடும்பங்கள்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் ஆயுதப்படை குடியிருப்பு கட்டடம் சேதம்: அச்சத்தில் போலீஸார் குடும்பங்கள்

    By DIN  |   Published on : 18th May 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் ஆயுதப்படை குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், காவலர்கள் குடும்பங்கள் அச்சத்தில் உள்ளன.  
          விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள், காவல் சார்பு-ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் குடியிருப்பு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டடங்களின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளன. மேலும், செடிகள் வளர்ந்துள்ளதால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டடம் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் காவலர்களின் குடும்பத்தினர் உள்ளனர். 
        மேலும், குடியிருப்பு வளாகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. 
       எனவே, சேதமடைந்த கட்டடங்களை சீரமைப்பதுடன், குடியிருப்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, போலீஸார் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai