Enable Javscript for better performance
ஸ்ரீவிலி.யில் குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு குளத்தில் மூழ்கி உணவகத் தொழிலாளி உயிரிழந்தார்.
        ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை சன்னதி தெருவைச் சேர்ந்தவர் பெ. மாரியப்பன் (45). இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், தினமும் இரவு வேலை முடிந்ததும் கோனேரி குளத்தில் குளித்துவிட்டுச் செல்வாராம்.
        புதன்கிழமை இரவு வழக்கம்போல் குளத்தின் கரையில் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளித்துள்ளார். அதன்பின்னர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். வியாழக்கிழமை காலையில் குளத்தில் சடலமாக மிதந்துள்ளார். 
        இது குறித்து மாரியப்பனின் மகன் விஜயகுமார் (22) நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai