Enable Javscript for better performance
ஸ்ரீவிலி. பகுதியில் இடிந்து விழும் அபாயத்தில் பழமையான கல் மண்டபங்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி. பகுதியில் இடிந்து விழும் அபாயத்தில் பழமையான கல் மண்டபங்கள்

    By DIN  |   Published on : 18th May 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஏராளமான கல் மண்டபங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இவற்றை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
         மதுரையை ராணி மங்கம்மாள் ஆட்சி செய்த காலத்தில், திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரபட்டி, கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில் வழியாக திருச்செந்தூர் செல்லும்போது, ராணி குடும்பத்தினர் இளைப்பாற ஆங்காங்கே கல் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. மேலும், இவர்களை சுமந்து சென்ற குதிரைகள் தண்ணீர் அருந்துவதற்கு வசதியாக, மண்டபம் அருகே சிறு சிறு குட்டைகளும் வெட்டப்பட்டன. வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட இந்த கல் மண்டபங்கள், குட்டைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால், பல குட்டைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகிவிட்டன.     கல் மண்டபங்கள் புதர் மண்டி சிதிலமடைந்துள்ளன. மேலும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படும் மண்டபத்தின் தூண்களை, தங்கள் பயன்பாட்டுக்காக சமூக விரோதிகள் பெயர்த்து கடத்திச் செல்கின்றனர்.
         இந்த மண்டபங்களில் சேதமடைந்துள்ள பெரிய கல்தூண்கள் காற்றுக்கும், மழைக்கும் விழுந்து வருகின்றன. அபாயகரமான நிலையில் உள்ள இந்த மண்டபங்களில் வழிப்போக்கர்கள் இளைப்பாறியும், தங்கியும் செல்கின்றனர்.  இது தவிர, இந்த மண்டபங்களில் பல்வேறு சமூக விரோதச் செயல்களும் நடக்கின்றதாகக் கூறப்படுகிறது.    ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் அருகேயுள்ள கல்மண்டபத்தில் விறகுக் கடை செயல்பட்டு வருகிறது.
       எனவே, சிதிலமடைந்துள்ள மிகவும் பழமையான இந்த மண்டபங்களை புனரமைத்து, அதில் உள்ள கலைநயமிக்க கற்களையும், தூண்களையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai