பேரிடர் மேலாண்மை நாள் விழிப்புணர்வு பேரணி

சாத்தூர், அருப்புக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை நாள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூர், அருப்புக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை நாள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரிடர் மேலாண்மை நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் துறை சார்பில் என்.மேட்டுபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன் கலந்து கொண்டு இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து விளக்கினார்.பின்னர் சாத்தூர் தீயணைப்பு துறையினர் சார்பில் பேரிடர் கால தற்காப்பு குறித்த ஒத்திகை நடைபெற்றது.
மேலும், எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணியை கோட்டாட்சியர் காளிமுத்து தொடக்கி வைத்தார். பேருந்து நிலையம் முன்பு தொடங்கி பிரதான சாலை வழியாக முக்குராந்தல் வரை சென்று, மீண்டும் பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்களுக்கு பேரிடர் தணிப்பு தொடர்பான கருவிகளை கையாளுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி தொடக்கி வைத்தார். இதில் வருவாய்த்துறையினர் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 
அருப்புக்கோட்டையில்: மதுரை காமராஜர் உறுப்புக் கல்லூரியில் தீயணைப்புத்துறையினர் சார்பாக பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் செல்லப்பா, வட்டாட்சியர் சந்திரசேகரன்,ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் அழகுச் செல்வம், அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறை அதிகாரி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் பேரிடர்களின் போது செய்யவேண்டிய பாதுகாப்பு முறைகள், உதவி கோரித் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் செயல் விளக்கம்  மூலம் செய்து காண்பித்தனர்.ல்லூரி மாணவர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசியர்கள் மகேந்திரன், தனசேகரன், ஞானேஸ்வரன், முருகானந்தம், இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்  கார்த்திகைச் செல்வன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com