விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு பாலவநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:  விருதுநகர் மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் மூலம் டெங்கு மற்றும் வைரஸ் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விருதுநகர் நகராட்சி பகுதிகள், பள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் அதிகாலை நேரங்களில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அரசு அலுவலகங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினசரி கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். 
கொசுக்கள் பாத்திரத்தின் உள்ளே புகா வண்ணம் மூடி வைப்பதுடன், தங்கள் வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  
மேலும், தேவையற்ற மண் பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதுடன், வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடி வைக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் வகைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும். 
காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சைப் பெற வேண்டும். கொசு ஒழிப்பு பணிக்கென தங்கள் வீடுகளை நாடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com