சுக்கிலநத்தம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை சேதம்
By DIN | Published on : 12th September 2018 05:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுக்கிலநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், உள்பகுதியில் சிமென்டால் கட்டப்பட்ட இருக்கைகளும், காங்கிரீட் மேற்கூரையும் சேதமடைந்துள்ளன. மேலும், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், யாரும் இதனுள் செல்வதில்லை.
எனவே, இந்த நிழற்குடை கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடையோ அல்லது இதை சீரமைத்தோ தரவேண்டும் என, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.