மாநில எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா
By DIN | Published on : 12th September 2018 05:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாநில அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இப் பள்ளி மாணவர் ஸ்ரீராம் குமார், கரூரில் மாநில அளவில் நடைபெற்ற எறி பந்து போட்டியில் வெற்றி பெற்று, தமிழக எறிபந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அணிக்கு தேர்வு பெற்ற மாணவருக்கு, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.