பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுக்கும் ஆராய்ச்சி கலசலிங்கம்  பல்கலை.க்கு  ரூ.31 லட்சம் ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனத்தில், பட்டாசு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனத்தில், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறை தலைவர் ராமலட்சுமி மற்றும் பேராசிரியர் ராபர்ட்சிங் ஆகியோர் அடங்கிய குழு, தமிழகத்தில் உள்ள  பட்டாசுத் தொழிற்சாலைகளில் 2018 முதல்  2021 ஆம் ஆண்டு வரை விபத்துகளைத் தடுப்பதற்கான ஆராய்ச்சி செய்ய, மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை  பிறப்பித்துள்ளது.
இது சம்பந்தமாக, அனைத்து விதமான பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆராய்ச்சி செய்து, அதன் அறிக்கையை மத்திய அறிவியல் கழகத்துக்கு சமர்ப்பிக்கப்படும். 
அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலிருந்து பெறப்பட்ட  நிதி ஒதுக்கீடு ஆணையை, பல்கலைக்கழகத் துணை தலைவர் சசி ஆனந்த், கணினி பொறியியல் துறை தலைவரிடம் வழங்கிப் பாராட்டினர்.
மேலும், பல்கலைக்கழக வேந்தர் கே. ஸ்ரீதரன், துணை வேந்தர் எஸ். சரவணசங்கர்  மற்றும் பதிவாளர் வெ. வாசுதேவன் ஆகியோரும்  இக் குழுவினரைப் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com