பந்தல்குடியில் புதிய நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி சந்தைப்பகுதி பேருந்து நிறுத்த நிழற்குடையை புதிதாக அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை


அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி சந்தைப்பகுதி பேருந்து நிறுத்த நிழற்குடையை புதிதாக அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தல்குடி கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக தினமும் பந்தல்குடிக்கு வந்து செல்கின்றனர். இதில் பந்தல்குடியின் மையப் பகுதியில் உள்ள சந்தைக்கு காய்கறிகள், பழங்கள், பலசரக்கு வாங்க வரும் கிராம மக்கள், வியாபாரிகள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து தங்கள் பகுதிக்கான பேருந்துகளைப் பிடித்து சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உரிய பராமரிப்பின்றி, கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்துவிட்டது.
இதையறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர், பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக நிழற்குடை கட்டடத்தை இடித்துவிட்டனர். இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தற்போது மழை, வெயிலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி, அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள், சிறுவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதுதொடர்பாக பந்தல்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, அப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க உள்ளதாக தெரிவித்தனர். இதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com