15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

பந்தல்குடியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட  பந்தல்குடியில் திங்கள்கிழமை இரவு திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 7:42 am IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட  பந்தல்குடியில் திங்கள்கிழமை இரவு திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்திற்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்து குறைகளைக் கேட்டறிந்தார். 
அப்போது அக்கிராம  பகுதியைச் சேர்ந்த  விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான நீர் நிலைகளைக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், பயிர்க்காப்பீடு, விவசாய விளை பொருள்களுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினர். 
அதேபோல மகளிர்க்கான நலத்திட்டங்கள் பற்றியும் மகளிர் சுகாதார மையங்களின் தேவை குறித்தும் பெண்கள் கோரிக்கைகள் வைத்தனர். 
அவற்றுக்கு விரைவில் உரிய நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. ராமச்சசந்திரன் விளக்கமளித்துப் பேசினார். 
உடன் இந்நிகழ்ச்சியில்  முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலரும், பந்தல்குடி கிராம விவசாயிகளும், ஏராளமான பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.