விருதுநகர் தேவாலயத்தில் தவக்கால தியானம்
By DIN | Published On : 01st April 2019 06:05 AM | Last Updated : 01st April 2019 06:05 AM | அ+அ அ- |

விருதுநகர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தூய ஜெபமாலை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவக்கால தியானத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு விருதுநகர், ஆர்.ஆர்.நகர், பாண்டியன் நகர், ஆற்றுப்பாலம் நிறைவாழ்வு நகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, தும்புசின்னம்பட்டி, ஒத்தையால், சாத்தூர் சிவகாசி, திருத்தங்கல், மரியானூஸ் நகர், வடபட்டி ஆகிய தேவாலயப் பகுதிகளைச் சேர்ந்தவரிகள் விருதுநகர் தூய ஜெயபமாலை ஆலயத்திற்கு யாத்திரையாக ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில், தூய இன்னாசியர் ஆலய பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் தலைமையில், நிறைவாழ்வு நகர் பாதிரியார் தாமஸ் வெனிஸ் முன்னிலையில் தியான நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமடத்தை சேர்ந்த சூசை செல்வ ராஜ் நற்செய்தி மற்றும் தியானச் சிந்தனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஜெபமாலை வழிபாடு, நற்செய்தி, நற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு அருள்சாதனம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.