சுடச்சுட

  

  அருப்புக்கோட்டையில் நாடார் உறவின்முறை நிர்வாகிகளிடம் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். 
         அதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி. சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் பற்றி மீண்டும் பொதுமக்களிடமும், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் கருத்துகேட்டு ஆலோசனை செய்த பிறகே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். 
       உலக த்தமிழ் மாநாட்டை நடத்தியது முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மட்டுமே. தமிழை வளர்த்த கட்சி அதிமுக. தமிழை விற்ற கட்சி திமுக.
       அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளை இணைத்து ரூ.470 கோடி மதிப்பீட்டில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai