சுடச்சுட

  

  ஏப்.18 இல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு

  By DIN  |   Published on : 16th April 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளார். 
  தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளில் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
  இதையொட்டி, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணி புரியும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கவேண்டும்.
  இது தொடர்பாக, விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையம் (அமலாக்கம்) அலுவலகத்தில், செவ்வாய், புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. 
  எனவே, தேர்தல் நாளான்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகள் குறித்து, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) - 94422-29502, 04562- 252130, தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலர் 95662- 81423, தொழிலாளர் துணை ஆய்வாளர் 96553-44382, தொழிலாளர் உதவி ஆய்வாளர் 99945-23347 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். அதன்பேரில், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  சிவகாசி : மக்களவைத் தேர்தலுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், அனைத்து தொழில் நிறுவனங்கள், கட்டடம் மற்றும் இதர கட்டுமானப் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அந்தந்த உரிமையாளர்கள் அளிக்கவேண்டும் என, சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் மா.வேலுமணி  திங்கள்கிழமை தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai