சுடச்சுட

  

  சிவகாசி, ஸ்ரீவிலி., சாத்தூரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

  By DIN  |   Published on : 16th April 2019 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூரில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
  ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, சிவகாசி தொகுதியில் மேற்கு வங்க மாநில ஆயுதப் படை (எஸ்.ஏ.பி.) போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்,  இவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில், சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரத வீதி, சிவகாசி-திருத்தங்கல் சாலை வழியே திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தனர். கொடி அணிவகுப்புக்கு, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
  ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில், போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் உள்ள 100 போலீஸார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்துள்ள 60 போலீஸாரும் இணைந்து, இந்த கொடி அணிவகுப்பை நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் காவல் நிலையத்தில் முடிவடைந்தது.
  சாத்தூர்: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணியை திங்கள்கிழமை நடத்தினர். இப்பேரணியை, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். 
  சாத்தூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பிரதான சாலை, வெள்ளகரை சாலை, மேலகாந்தி நகர், நடராஜ் தியேட்டர் சாலை, 
  பை-பாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்றது. 
  இதில், சாத்தூர் காவல் துறை கண்காணிப்பாளர் சரகத்துக்குள்பட்ட போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai