சுடச்சுட

  

  பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி

  By DIN  |   Published on : 16th April 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
  மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் 
  கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் மற்றும்  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த 28  நாள்களுக்கும் மேலாக பிரசாரம் செய்து வருகிறார். 
  இந்நிலையில், ஞாயிற்றுகிழமை இரவு சாத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது: 
  இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி 40, 18 என வெற்றி பெறும்.  சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 2 
  லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெறறி பெறுவார்.
  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதால், பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 
  தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் நன்மை கிடைக்க வேண்டுமென்றால், அது பிரதமர் மோடியால் தான் முடியும். கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் என்பதே இல்லை. சிறுபான்மையின மக்களின் உண்மை நண்பனாக மோடி திகழ்கிறார் என்றார். 
  பிரசாரத்தில், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai