Enable Javscript for better performance
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் பிரசாரம்

    By DIN  |   Published on : 16th April 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் சென்று திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
            மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் சார்பில் அக்கட்சியினர் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
          விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பிரசாரத்தை, அக்கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலர் ஆர். த்துவேலு தொடக்கி வைத்தார். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த ஜெ.ஜே. சீனிவாசன், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பேசினார். அதன்பின்னர், விருதுநகர் தெற்கு ஒன்றியம் பொம்மையாபுரம் முதல் மேல சின்னையாபுரம் வரை இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தனர். மேலும், பொதுமக்களிடம் கை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி துண்டுப்பிரசுரம் வழங்கினர். வாக்கு சேகரிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai