சுடச்சுட

  

  அஞ்சல்துறைக்கு மூன்று நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது  என விருதுநகர் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ம.நிரஞ்சனாதேவி கூறியுள்ளார்.
   சிவகாசியில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
  ஏப்ரல் 17 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி புனித வெள்ளி என மூன்று நாள்கள் அஞ்சலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் நலன் கருதி ஏப்ரல் 17 ஆம் தேதி (புதன்கிழமை) விரைவு அஞ்சல் மற்றும் சாதாரண அஞ்சல்களை பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள  அனைத்து அஞ்சல் பட்டுவாடா வசதியுள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் விரைவு அஞ்சல்கள் மற்றும் கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்ட சாதாரண அஞ்சல்களை பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai