சுடச்சுட

  

  திமுக ஆட்சியில் தான் தமிழக ஜீவாதார உரிமைகள் பறிப்பு: அமைச்சர் பிரசாரம்

  By DIN  |   Published on : 17th April 2019 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக ஆட்சிக் காலத்திலே தான் முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவு உரிமைகளை பறி கொடுத்தோம் என  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
   சாத்தூர் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து சாத்தூர் பிரதான சாலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செவ்வாய்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். 
   சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தொடங்கி பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையம் வழியாக,  மதுரை பேருந்து நிறுத்தம் வரை சென்று பிரசாரம் செய்தபோது அமைச்சர் கூறியது: 
   தை பொங்கலுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கினார். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு எதிராக திமுக வழக்குத்தொடர்ந்ததால் தடை விதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் ரூ.2000 நிதி வழங்கப்படும்.  திமுக ஆட்சிக் காலத்திலே தான் முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவு உரிமைகளை எல்லாம் பறி கொடுத்தோம். 
  இலங்கைத் தமிழர்கள் வாழ்வுக்கு உலை வைத்தவர்களும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியினர்தான். இதைச் சிந்தித்துப் பார்க்கும் மக்கள் தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்.  அதிமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றபடும் என்றார். பிரசாரத்தின் போது அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai