சுடச்சுட

  

  ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்துள்ள புத்தூர் விலக்கில் செவ்வாய்க்கிழமை காலை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வர பாண்டியன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம், ஈஸ்வரன், ஐயப்பன்  ஆகிய மூவரிடம் ரூ. 1லட்சத்து 17 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கார் விற்பனையில் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பணத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai