சுடச்சுட

  

  விருதுநகரில் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்

  By DIN  |   Published on : 17th April 2019 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர்  வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
   விருதுநகர் மக்களவை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
        இதில் பதிவாகும் வாக்குகள் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு  முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேற்கண்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும். 
   இம்மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அ.சிவஞானம், தேர்தல் பொதுப் பார்வையாளர் முகேஷ்குமார் சுக்லா ஆகியோர் ஏற்கெனவே ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் வெளிப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
           மேலும், இப் பகுதி பாதுகாக்கப்பட்டது என்பதால் தினமும் துணை ஆட்சியர் பொறுப்பில் உள்ள உயர் அலுவலர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai