பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தை தக்க வைக்குமா?

விருதுநகர் மாவட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. இந்நிலையில்

விருதுநகர் மாவட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. இந்நிலையில் நிகழாண்டில் மீண்டும் முதலிடத்தை தக்க வைக்குமா என கல்வியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 214 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 10,275 மாணவர்கள், 12,068 மாணவிகள் என மொத்தம் 22,343 பேர் 96 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதேபோல், தனித் தேர்தவர்கள் 237 மாணவர்கள், 429 மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 
கடந்த ஆண்டைப் பொறுத்த வரை 24,297 பேர் தேர்வு எழுதியதில், 10,285 மாணவர்கள், 13,295 மாணவிகள் என மொத்தம் 23,580 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 
மேலும், கடந்த 2001 முதல் 2010-2011 வரை பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று வந்தது. அதன் பிறகு, 2011- 2012 முதல் 2015- 2016 வரை முதலிடத்தை இழந்தது. இதையடுத்து, கடந்த 2017 மற்றும் 2018 இல் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தை பெற்றது. 
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வெளிவர உள்ளன. எனவே, நிகழாண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தை தக்க வைக்குமா என கல்வி ஆர்வலர்கள், மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com