சங்கடஹர சதுர்த்தி பூஜை
By DIN | Published On : 23rd April 2019 07:31 AM | Last Updated : 23rd April 2019 07:31 AM | அ+அ அ- |

ராஜபாளையம் ஆதி விநாயகர் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள ஆதி விநாயகர் திருக்கோயிலில், விநாயகருக்கு பால், பன்னீர், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.