முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் மனவலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
By DIN | Published On : 04th August 2019 03:44 AM | Last Updated : 04th August 2019 03:44 AM | அ+அ அ- |

சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களது மன வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மனோதத்துவ நிபுணர் டி.ரகுநாத் கூறினார்.
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் கல்லூரி ஆகியவற்றின் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்- ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை வகித்தார். இதில் மனோதத்துவ நிபுணர் ரகுநாத் பேசியது: பள்ளிப் பருவம் படிப்பில் முதல் படி என்றால் கல்லூரி படிப்பு வாழ்க்கையின் முதல்படி எனக்கூறலாம். உங்களது பெற்றோர்கள் தங்களது மகன் உயர் கல்வி பெற வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பொறியியல் கல்லூரியை தேர்வு செய்து உங்களை கல்லூரிக்கு அனுப்பி உள்ளனர். மாணவர்கள் அதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தற்போது உங்களின் கவனத்தை திசை திருப்ப , சமூக வலைதளங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் படிப்பு ஒன்றையே இலக்காக எண்ணி திசை திரும்பாமல் கல்வி கற்க வேண்டும். இந்த கல்லூரியில் உங்களுக்கு வேலையை உறுதி செய்யும் நோக்கில் பல வகையான ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
இந்த ஆய்வு கூடங்களில் கவனம் சிதறாமல் ஆய்வுகளை பல செய்து, வேலை வாய்ப்பினை பெற நீங்கள் தகுதி உள்ளவர்களாக்கி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த உலகில் பல சவால்களை நீங்கள் எதிர்கொள்ள இருப்பதால் அதற்கான மனவலிமையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி குத்துவிளக்கேற்றினார். முதல்வர்கள் பி.ஜி.விஷ்ணுராம், சி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டீன் பி.மாரிச்சாமி வரவேற்றார். பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.