முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சாத்தூர் குருலிங்காபுரம் பகுதியில் சாலை, வாருகால் வசதி செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 04th August 2019 03:43 AM | Last Updated : 04th August 2019 03:43 AM | அ+அ அ- |

சாத்தூரில் உள்ள குருலிங்காபுரம் பகுதியில் சாலை மற்றும் வாருகால் வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட குருலிங்காபுரம் பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாருகால் வசதி இல்லாததால் குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசுத் தொல்லை அதிகமாகிறது. மேலும் இந்த பகுதியில் முறையான குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்படவில்லை என இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிபடை வசதிகள் செய்து தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.