முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 457 பேருக்கு பணி நியமனம்
By DIN | Published On : 04th August 2019 03:45 AM | Last Updated : 04th August 2019 03:45 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 457 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீசெளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இம்முகாமை நடத்தின. இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரையும், தொழிற்பயிற்சிப்படிப்பு முதல் பட்டயப் படிப்பு, செவிலியர் உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதிகளுக்கான பணிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 715 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 457 பேருக்கு அதிகாரி தெய்வேந்திரன் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார்.