முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
By DIN | Published On : 04th August 2019 03:44 AM | Last Updated : 04th August 2019 03:44 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (80). இவர் தனியார் தறிசெட்டில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். வழக்கம் போல் ஊருக்கு மேற்கே உள்ள கானாக்குளம் கண்மாய் கரையடிவாரம் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றவர் படிக்கட்டில் கால் இடறி தடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.