Enable Javscript for better performance
சிவகாசியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி: மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி: மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை

    By DIN  |   Published on : 05th August 2019 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
       இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகாசியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சிவகாசியில் பள்ளி அமைந்தால் சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். இப்பள்ளி கட்டுவதற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும். மத்திய அரசு பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மக்களவையில் பேசுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai