தென்னிந்திய சதுரங்க இறுதிப் போட்டி: முதலிடம் பெற்றவருக்கு ரூ.60,000 ரொக்கப் பரிசு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சதுரங்க இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னையைச் சேர்ந்தவருக்கு ரூ.60 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், கோப்பை வழங்கப்பட்டது.
தளவாய்புரத்தில் கடந்த  ஆகஸ்ட் 1 ஆம் தேதி தென்னிந்திய அளவிலான சதுரங்க போட்டிகள் தொடங்கியது. 4 நாள்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 152 பேர் பங்கேற்றனர்.
8, 10, 12, 15 வயதிற்குள்பட்டோருக்கான போட்டிகள் ஒரு பிரிவாகவும், அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் பொதுப் பிரிவு போட்டிகள் ஒரு பிரிவாகவும் "ஸ்விஸ் லீக்' முறையில் நடைபெற்றன. 
மொத்தம் 7 சுற்றுக்களாக நடைபெற்ற போட்டிகளின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில் "டை பிரேக்கர்' முறையில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில், முதல் இடத்தை பிடித்த சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு கோப்பையுடன் ரூ.60 ஆயிரம் ரொக்கப் பரிசு, 2 ஆம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரசன்னா என்பவருக்கு கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, 3 ஆம் இடம் பிடித்த காரைக்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களுடன் ரூ.2.50 லட்சம் பரிசுத்தொகை அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில்  வழங்கப்பட்டது.  
வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தன்னார்வ அமைப்பின் ஆளுநர் ஷேக் சலீம் அலி, தளவாய்புரம் காவல்  ஆய்வாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com