சுடச்சுட

  

  ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஜெனீவா மாநாட்டு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
        இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்து,  ஜெனீவா மாநாட்டின் பின்னணி குறித்து எடுத்துரைத்தார். மேலும், வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ்குமார், ஜெனீவா மாநாட்டு நாளின் முக்கியத்துவம் குறித்தும், ஜெனீவா மாநாட்டுக்கு ஹென்றி டுனன்ட்  ஆற்றிய பங்களிப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
       விழாவில், 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் செய்திருந்தனர்.    முன்னதாக,  செஞ்சிலுவைச் சங்க மாணவர் செல்வன் கணேசன் வரவேற்றார். தங்கமணிகண்டன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai