சுடச்சுட

  

  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒரு அறை தரைமட்டம்

  By DIN  |   Published on : 14th August 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், அங்குள்ள ஒரு அறை தரைமட்டமானது.
          விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் ( 45). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை பூசாரிநாயக்கன்பட்டியில் உள்ளது. இந்தப் பட்டாசு தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிக்கும் அறைகள் உள்ளன.      இங்கு, தொழிலாளர்கள் வழக்கம்போல்  செவ்வாய்க்கிழமை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, பணிகளை முடித்து சென்றுவிட்டனர். பின்னர், ஃபோர்மேன் ஆறுமுகம் என்பவர், ஆலையில் உள்ள கழிவுகளை  அகற்றியுள்ளார். அப்போது, பட்டாசுக் கழிவில் தீப்பற்றி வெடித்து சிதறி, அருகிலுள்ள பட்டாசு தயாரிக்கும் அறையில் விழுந்துள்ளது. இதில், பட்டாசு தயாரிக்கும் அறை இடிந்து தரைமட்டமானது. 
       தகவலறிந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பட்டாசு ஆலையின் ஃபோர்மேன் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai