சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கள்ளக்காரி கிராமத்தில் அமைந்துள்ள மொட்டை இருளப்பசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
          இக்கோயிலில்  ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு, ஊர்ப் பொதுமக்கள் கூடி மாட்டு வண்டிப் பந்தயம் நடத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு இக்கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 
         இதில், செவ்வாய்க்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில், கள்ளக்காரி கிராமத்தில் தொடங்கி பெருநாழி விலக்கு வரை மொத்தம் 7 கிலோ மீட்டர் தொலைவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், சிறிய மாட்டு வண்டிகள் மற்றும் பெரிய மாட்டு வண்டிகள் என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
         இப்போட்டியில், விருதுநகர், தேனி, மதுரை,திண்டுக்கல், ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறிய மாட்டு வண்டிகள் 7, பெரிய மாட்டு வண்டிகள்  6 என கலந்துகொண்டன. 
       போட்டியில் வென்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசாக  ரூ. 21 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.19 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.  15 ஆயிரமும் வழங்கப்பட்டன.
       இப்போட்டியைக் காண, திருச்சுழி, கள்ளக்காரி சுற்றுவட்டக் கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்து, வழியெங்கும் நின்று ஆரவாரம் செய்தனர்.
   இதையொட்டி, திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai