சுடச்சுட

  

  ராஜபாளையம் அருகே கல் குவாரியில்  தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி: உறவினர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 14th August 2019 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கல் குவாரி பாறையிலிருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து,  உரிய நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 
         ராஜபாளையம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பால்சாமி(51). இவர், கொல்லங்கொண்டானில் உள்ள  தனியார் கல் குவாரியில் கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இதில், மலையில் உள்ள பாறைகளை தகர்க்க, இயந்திரம் மூலம் துளையிட்டு வெடி வைப்பது வழக்கம்.      செவ்வாய்க்கிழமை பகலில் பாறையில் வெடி வைப்பதற்காக, சுமார் 100 அடி உயரத்தில் நின்றவாறு பால்சாமி பாறையை துளையிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, துளையிடும் கம்பி உடைந்ததில், நிலை குலைந்து அங்கிருந்து விழுந்த  பால்சாமி, பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.      தகவலறிந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில்  திரண்டனர். அப்போது, அங்கு வந்த சேத்தூர் ஊரகக் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால், பால்சாமி இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்கும் வரை சடலத்தை எடுக்கவிடமாட்டோம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
       சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் சம்பவ இடத்துக்கு வந்த உரிமையாளர், பால்ச்சாமியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, பால்ச்சாமியின் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்குவதாக உரிமையாளர் உறுதி அளித்தார். அதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பின்னர், பால்சாமியின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai