சிவகாசி ஊராட்சிப் பகுதியில் எம்.பி. ஆய்வு

விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று

விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். 
       ஈஞ்சார், நடுவப்பட்டி, கிருஷ்ணப்பேரி, சாமிநத்தம், மங்களம் உள்ளிட்ட 10 ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்ற மக்களவை உறுப்பினர், குடிநீர் பிரச்னைகள் உள்ளதா எனவும், நூறு நாள் வேலைத் திட்டம் சிறப்பாக நடைபெறுகிறதா எனவும், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களைச் சென்றடைகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.      பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:    கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும், குடிநீர் பிரச்னைகள் குறித்தும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சுமார் 30 ஊராட்சிகளில் ஆய்வு நடத்த உள்ளேன். இதில், முதல் கட்டமாக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் ஆய்வு செய்கிறேன்.     நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு அரசு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தால், அதில் ரூ. 4 லட்சம் சம்பளமாக வழங்க வேண்டும். மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயில் கடப்பாரை, தட்டு உள்ளிட்ட பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இங்கு பொருள்கள் வாங்குவதற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என, கடந்த நிதி ஆண்டின் ஆய்வறிக்கை கூறுகிறது.      ஊராட்சிகளில் ஆய்வு செய்து, அது சம்பந்தமான அறிக்கையை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பேன். மேலும், ஊராட்சிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து மக்களவையில் பேசுவேன் என்றார். 
    அவருடன், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com