சிவகாசியில் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பல துறைகளில் சிறப்பு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பல துறைகளில் சிறப்பு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
      இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் வைரமுத்து, புணேயில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் தாவரங்கள் குறித்து 2 மாதங்கள் ஆய்வு செய்துள்ளார். மாணவி கே. மீனாட்சி, தமிழ்நாடு அறிவியல் கழகம் நிதியுதவியுடன் சென்னையில் 2 மாதங்கள் நோய் கிருமிகளும், மருந்துகளும் என்ற ஆய்வினை செய்துள்ளார். மாணவி பா. பிரியதர்ஷினி வழிபாட்டுத்தலங்கள் குறித்தும், மாணவி திவ்யா ஆரோக்கியம் மற்றும் சத்துணவு குறித்தும், மாணவி ஜெயதாரணி இயற்கை உரங்கள் குறித்தும், மாணவி பா. கார்த்திகா தாவரங்கள் குறித்தும், தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் நிதியுதவியுடன் சென்னையில் 2 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டனர்.     அதேபோல், மாணவி கார்த்தீஸ்வரி, வார இதழ் ஒன்றுக்கு மாணவர் பத்திரிகையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
     கல்லூரியில் சிறப்பு பெற்ற இந்த 8 மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, முதல்வர் சீ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் ஏ.பி. செல்வராஜன் மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணை முதல்வர்கள் பெ.கி. பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, பேராசிரியர் சுஜாதா வரவேற்றார்.பிரியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com