சுடச்சுட

  

  சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 15th August 2019 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  சிவகாசி-விளம்பட்டி சாலையிருந்து பால் வண்ண அய்யனார் கோயில் அருகில் இருந்து, சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள இரட்டைப் பாலம் வரையிலான சாலை பெரியகுளம் கண்மாய் சாலையாகும். இந்த சாலை சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள இச் சாலை சுமார் ஒரு கி.மீ. நீளமுடையது. தற்போது சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் பள்ளிப் பகுதியில், கழிவு நீர்வாய்க்கால் அமைக்கும் பணி, குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால், சிவகாசியிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்து சென்று வர இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கனரக வாகனங்களும் இச்சாலை வழியே சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்களில் மேடு பள்ளம் உள்ளது. இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
  எனவே பொதுமக்கள் இரவு நேரத்திலும் அச்சமின்றி சென்றுவர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இச்சாலையில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai