சுடச்சுட

  

  சுதந்திர தினம்: சாத்தூரில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

  By DIN  |   Published on : 15th August 2019 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
  சாத்தூர் படந்தாலில் உள்ள அமிர்தா தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதற்கு அதன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்தார். இதில் அப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோலப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அருணா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பெண்களின் உரிமை பற்றி எடுத்துரைத்து, வெற்றி பெற்ற பெண்களுக்கு  பரிசுகளை வழங்கினார். 
  பின்னர் சமூக நலத் திட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.  இதற்கு மைய பொறுப்பாளர் வீரலட்சுமி முன்னிலை வகித்தார். மன நல ஆலோசகர் கனிமொழி பெண்கள் மன நலம் குறித்து கருத்துரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் சலுகைகள், திட்டங்கள் குறித்தும் மகளிருக்கு எடுத்துரைக்கப்பட்டது. சமூக நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆசிரியை தமிழ்செல்வி பேசினார். நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் கிராமப் புற மகளிர் பயனடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிர் குழுத் தலைவி காளீஸ்வரி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai