சுடச்சுட

  

  சுப்பிரமணியபுரம் கிராமத்தில்  மக்கள் தொடர்பு திட்ட முகாம்

  By DIN  |   Published on : 15th August 2019 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர்  மாவட்டம் சாத்தூர் அருகே  சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆட்சியர் அ. சிவஞானம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 93 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விதவை உதவித் தொகை, இலவச மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத் திட்டத்திற்கான உத்தரவுகளை அவர் வழங்கினார். 
  மேலும் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, சாத்தூர், வத்திராயிருப்பு, நரிக்குடி, காரியாபட்டி ஆகிய 5 வட்டாரங்களில்  நலவாழ்வு திட்டத்தின் கீழ் ரத்த பரிசோதனை மாதிரிகள் எடுத்துச் செல்லும் இரு சக்கர வாகனங்களை தொடக்கி வைத்தார்.
   மேலும் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து செயல் விளக்க கண்காட்சியையும் அவர் தொடக்கி வைத்தார். 
  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார்,திட்ட இயக்குநர்கள், சுரேஷ், தெய்வேந்திரன், மண்டல இணை இயக்குநர் அருணாசலக்கனி, சிவகாசி வட்டாட்சியர் வானதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai