சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட தமிழ்ப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட தமிழ்ப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  இதையொட்டி ஆகஸ்ட் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழ்ப்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள
  பகுதிகளில் காலை 9  மணி முதல் பகல் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai