சுடச்சுட

  

  ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான எறிபந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. 
  இப் போட்டிகளை  பள்ளி தாளாளர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா தொடக்கி வைத்தார். தலைமையாசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். 
  பூப்பந்து போட்டிகள் 14, 17, 19 வயதிற்குள்பட்ட மூன்று வகை பிரிவுகளில் நடைபெற்றது. 14, 17 வயது பிரிவு மாணவர்களுக்கான முதல் பரிசை ஏ.கே.டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், 2 ஆம் இடத்தை அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியும் வென்றன. 19 வயது மாணவர் பிரிவில் முதல் பரிசை அன்னப்பராஜா பள்ளியும், 2 ஆவது பரிசை  ஏ.கே.டி. ஆண்கள் பள்ளியும் வென்றன. மாணவிகளுக்கான 14, 17, 19 வயது பிரிவுகள் அனைத்திலும் அன்னப்பராஜா பள்ளியும், பி.ஏ.சி.ஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் வென்றன.மாணவிகளுக்கான எறிபந்து  போட்டிகளில் 14 வயது பிரிவில் ஏ.கே.டி.ஆர் பெண்கள் பள்ளி முதலிடமும், அன்னப்பராஜா பள்ளி  2 ஆம் இடமும், 17, 19 வயது பிரிவுகளில்  ஏ.கே.டி.ஆர் பெண்கள் பள்ளி முதலிடமும், சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அம்மணி அம்மாள் பள்ளி ஆகியன 2 ஆம் இடமும் வென்றன. ஏற்பாடுகளை உடற் கல்வி இயக்குநர் வெங்கடேசன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai