சுடச்சுட

  

  விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாமுக்கு மருத்துவர்கள் வருகை தாமதம்: மாற்றுத்திறனாளிகள் அவதி

  By DIN  |   Published on : 15th August 2019 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமுக்கு மருத்துவர்கள் சிலர் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், மாற்றுத் திறனாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
   விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத் திறனாளிகள் உறவினர்களின் உதவியுடன் உடல் பரிசோதனைக்காக வருவது வழக்கம். 
  இந்த மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு எலும்பு முறிவு, கண், காது மூக்கு தொண்டை, நரம்பியல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்கள் ஆய்வு மேற்கொள்வர். 
  அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு  அவர்களது உடல் குறைபாடுகளின் தன்மைக்கு ஏற்ப சான்றிதழ் வழங்குவர். இந்த சான்றிதழ்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு தேவையான 3 சக்கர வாகனம், அரசின் நலத் திட்ட உதவிகள், அரசு உதவித் தொகை உள்ளிட்டவற்றை மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற முடியும். 
  இந்நிலையில், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பரிசோதனைக்காக புதன்கிழமை காலை 8 மணிக்கு வந்தனர். ஆனால், சிறப்பு முகாமில் பங்கேற்க வரவேண்டிய எலும்பு முறிவு மருத்துவர், நண்பகல் 12 மணி வரை மருத்துவமனைக்கு வரவில்லை. 
  இதனால், பரிசோதனை செய்ய முடியாமல் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அவதிப்பட்டனர். 
  எனவே, இது போன்ற சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai