எரிச்சநத்தம் கண்மாய் குடிமராமத்துப்பணி தொடக்கம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரித்தநத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை கண்மாய் குடிமராமத்துப் பணியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்


சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரித்தநத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை கண்மாய் குடிமராமத்துப் பணியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.
 தமிழ்நாடு நிர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினர் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் உள்ள கண்மாய் குடி மராமத்துப் பணியை தொடங்கினர். இந்தப்பணியை தொடக்கி வைத்த பின், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிலத்தடி நீர் பாதுகாப்பு திட்டத்தைக் கொண்டு வந்து, வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்புத் தொட்டியை அமைக்க உத்தரவிட்டார். 
 தற்போது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, நீர் மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும்  நோக்கத்தில் குடிமராமத்துப் பணியை தமிழககம் முழுவதும் செய்ய உத்தரவிட்டுள்ளார். 
இதனால் விவசாயிகள் நன்மை அடைவதோடு, நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் பிரச்னையும் தீரும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான அனைத்து கண்மாய்களும், கிராமங்களில் உள்ள ஊருணிகளும் தூர்வாரப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்கு கண்மாய்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், ஊருணிகளுக்கு தலா ஒரு லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் அதிகாரி
கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com