Enable Javscript for better performance
குடிமராமத்துப் பணிகளை ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    தமிழக அரசு உத்தரவின்படி, மாவட்டம்வாரியாக நீர்நிலைகள், நீர்வரத்துக் கால்வாய்கள்ஆகியவற்றை சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மேலும் தேவைக்கேற்ற இடங்களில் புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து  குடிநீர் ஆதாரங்களை உருவாக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
    இதன்படி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களான பள்ளிமடம், புலிக்குறிச்சி, சென்னிலைக்குடி ஆகிய கிராமங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளையும், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் இடங்களையும், மழைநீர் வரத்துக் கால்வாய் சீரமைப்பு மற்றும் பாலங்கள், கால்வாய்கள்அமைக்கும் பணிகளையும், ஆட்சியர் அ.சிவஞானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அப்போது அவர், பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆட்சியருடன், பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் பலர் சென்றிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai