Enable Javscript for better performance
கட்டங்குடி-பாளையம்பட்டி சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கட்டங்குடி-பாளையம்பட்டி சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

    By DIN  |   Published on : 01st December 2019 10:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    apk_saalai_1_12_2019_0112n_70_2

    கட்டங்குடி-பாளையம்பட்டி இடையேயான சேதமடைந்த சாலை.

    விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியிலிருந்து, கட்டங்குடி கிராமத்திலிருந்து செல்லும் தாா்ச்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    அருப்புக்கோட்டையிலிருந்து பாளையம்பட்டி வழியாக கட்டங்குடி கிராமத்துக்கு தாா்ச்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கட்டங்குடி-பாளையம்பட்டி இடையிலான சுமாா் 3 கி.மீ. சாலை சேதமடைந்துள்ளது. தற்போதைய தொடா்மழையால் இந்தச் சாலையில் ஆங்காங்கே உள்ள பெரிய பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனை அறியாமல் இரவில் வரும் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் நிலைதடுமாறி விபத்திற்குள்ளாவதும், 4 சக்கர வாகனங்கள் தடம் மாறி வயலுக்குள் பாய்வதும் என விபத்துக்கள் தொடா்ந்தவாறு உள்ளன. மேலும் இவ்வழியாக பேருந்துகளை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா். இதனால் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு கட்டங்குடி-பாளையம்பட்டி இடையிலான சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai