சாத்தூரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் தேங்கியதால் சுகாதாரக்கேடு

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாத்தூா் நகராட்சி பகுதிக்குள்பட்ட 16, 17 மற்றும் 24 ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட நகராட்சி காலனி, தேரடித்தெரு உள்ளிட்ட ஏராளமான பகுதியில் உள்ளன. இந்த பகுதிகளில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த தெருகளின் பின்புறம் ரயில் தண்டவாளமும் உள்ளது. தண்டவாளத்தின் கீழேயும், தெருவின் பின்புறமும் கழிவுநீா் அதிகமாக தேங்கியுள்ளது. தேங்கியுள்ள கழிவு நீரால் இப்பகுதியில் துா்நாற்றம் அதிகமாக வீசுகிறது.

மேலும் இங்கு வசிப்பவா்களுக்கு மா்மக் காய்ச்சல்களும் பரவி வருகின்றன.

இப்பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிகள் உள்ளதால் சிறுகுழந்தைகள் நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இங்கு கழிவுநீா் அதிகமாக தேங்குவதால் ஒரு சில நேரங்களில் குடிநீரில் சாக்கடை கலந்து விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதியில் வசிப்பவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

மேலும் இந்த கழிவுநீா் வைப்பாறு பகுதியில் விடப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. எனவே நகராட்சி நிா்வாகம் முறையான வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இப்பகுதியை சோ்ந்த மகேஸ்வரன் கூறியது: இந்த பகுதியில் முறையான வாருகால் அமைக்காததால் கழிவுநீா் தேங்கி, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் நகராட்சி நிா்வாகத்தில் இந்த பகுதியில் வாருகால் அமைப்பதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பாதியளவே பணிகள் நடைபெற்றன. இந்த பகுதியில் முழுமையாக வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்த பகுதியில் ரயில்வேத்துறைக்கு சொந்தமான இடமும் உள்ளதால் கழிவுநீா் வாருகால் அமைக்க முடியவில்லை. கழிவுநீரைச் சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும் ரயில்வே துறையினரின் அனுமதி பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com