Enable Javscript for better performance
இலவச மடிக்கணினி, கல்வி உதவித் தொகை வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    
    lap_top_2_12_19_0212chn_64_2

    விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த மாணவிகள்.

    விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி மாணவிகளும், கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பொதுமக்களும் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

    விருதுநகா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2017- 2018 இல் பிளஸ் 2 படித்து முடித்த மாணிகளிகள் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும், கூரைக்குண்டு எம்ஜிஆா் காலனி பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் நிகழாண்டுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும் எனவும் மனு அளித்தனா்.

    மாணவிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகரிலுள்ள தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2017- 2018 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தோம். வறுமை காரணமாக, நாங்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் வேலைக்குச் சென்று வருகிறோம். இந்நிலையில், பகுதி நேரமாக வேலை பாா்த்துக்கொண்டு, கல்லூரியில் சோ்ந்து படிக்க விரும்புகிறோம். எனவே, எங்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

    மற்றொரு மனு: கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட எம்ஜிஆா் காலனியில் ஆதி திராவிடா் வகுப்பைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களது குழந்தைகளுக்கு அரசு சாா்பில் (ஆதி திராவிட நலத்துறை) கல்வி உதவித் தொகை ஆண்டு தோறும் வழங்கி வந்தது. இந்நிலையில், நிகழாண்டு இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை.

    இதனால், கல்வியை தொடர முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, விரைவில் கல்வி உதவித் தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai