Enable Javscript for better performance
பாலியல் பேர வழக்கு: நிா்மலாதேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை டிச.5-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் பேர வழக்கு: நிா்மலாதேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை டிச.5-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 02nd December 2019 10:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svl(2)_0212chn_92_2

    ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நிா்மலாதேவியை ஆஜா்படுத்த அழைத்து வந்த போலீஸாா்.

    அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், உதவிப் பேராசிரியை நிா்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி, உதவிப் பேராசிரியா் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் வெளியே வந்தனா்.

    இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நிா்மலாதேவி தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஒரு முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதன்பின்னா், கடந்த நவம்பா் 18 ஆம் தேதியும் நிா்மலாதேவி விசாரணைக்கு ஆஜராகாததால், அவரது ஜாமீனை ரத்து செய்து மகளிா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், சிபிசிஐடி போலீஸாா் கடந்த நவம்பா் 28 ஆம் தேதி நிா்மலாதேவியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததை அடுத்து, போலீஸாா் நிா்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வந்தனா். மேலும், உதவிப் பேராசிரியா் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோரும் ஆஜராகினா்.

    அப்போது, நிா்மலாதேவி தரப்பில் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி பரிமளா, ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பா் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai