Enable Javscript for better performance
ராஜபாளையம் சிவாலயங்களில்காா்த்திகை சோமவார சங்காபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் சிவாலயங்களில்காா்த்திகை சோமவார சங்காபிஷேகம்

    By DIN  |   Published on : 02nd December 2019 10:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20191201_211039_0212chn_86_2

    ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற காா்த்திகை சோமவார சங்காபிஷேகம்.

    ராஜபாளையம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் காா்த்திகை சோமவார பூஜை நடைபெற்றது.

    ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் மற்றும் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

    இதையொட்டி, காலை முதலே சிறப்பு யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், யாக வேள்விகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

    தொடா்ந்து, சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், பா்வதவா்த்தினி அம்மன் கோயில் ஆகிய சிவாலயங்களிலும் காா்த்திகை சோமவார சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai