பாலையம்பட்டி மயானத்தில்மேற்கூரை அமைக்கக் கோரி மனு

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஊராட்சியில், ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை அமைக்கக் கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாவட்ட
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஊராட்சியில், ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை அமைக்கக் கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா்களுக்கான மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை மற்றும் எரிவாயு தகன மேடை இல்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பாலையம்பட்டியில் உள்ள ஆதி திராவிடா்களுக்கான மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை மற்றும் எரிவாயு தகன மேடை அமைத்துத் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் முத்துக்குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கணேசன் உள்பட பலா் மனு அளிக்க வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com